சத்தியமங்கலம் நகராட்சியில் தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 May 2022

சத்தியமங்கலம் நகராட்சியில் தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட கோட்டுவீராம் பாளையத்தில் அமைந்துள்ள மின் மயானத்திற்கு புதிதாக தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை சத்தியமங்கலம் நகராட்சித் தலைவரும், சத்தியமங்கலம்நகர திமுக பொறுப்பாளர்  திருமதி R.ஜானகி ராமசாமி அவர்களின் தலைமையிலும்,  சத்தியமங்கலம் நகராட்சி துணை தலைவர் திரு R.நடராஜ் அவர்கள், சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் திரு சரவணக்குமார் அவர்கள் முன்னிலையிலும் இந்த பூமி பூஜை நடைபெற்றது. 

மேலும் இந்த பூமி பூஜையில் திமுகப் பொறுப்புக் குழு உறுப்பினர் கே. எம் . எஸ். முருகன்,  நகர மன்ற 10வது வார்டு உறுப்பினர் S.L.வேலுச்சாமி,  ஆறாவது வார்டு உறுப்பினர் நந்தினி, 19வது வார்டு உறுப்பினர் லட்சுமி, 25வது வார்டு உறுப்பினர் செல்வி, ஒன்பதாவது வார்டு உறுப்பினர் புஷ்பவள்ளி முருகன்,  21வது வார்டு உறுப்பினர் பேபி, 17வது வார்டு உறுப்பினர் சரஸ்வதி, 26வது வார்டு உறுப்பினர் குமார், 4வது வார்டு உறுப்பினர் நாகராஜ், 11-ஆவது வார்டு உறுப்பினர் சரவணன், சத்தியமங்கலம் ரோட்டரி கிளப் டாக்டர் சாமியப்பன், ஆடிட்டர் மயில்சாமி, சாமி கவுண்டர், ஆர். திலக்  மற்றும் திமுக நிர்வாகிகளும், பொதுமக்களும் , திரளாக கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment