இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் காணெலி காட்சி வாயிலாக இலவச மின்சாரம் பெற்ற விவசாயிகளுடன் கலந்துரையாடினர். பின்னர் விழாவின் பேசிய தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் , தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தது முன்னாள் முதல்வர் கலைஞர் என்றும் கடந்த ஓராண்டில் ஒரு லட்ச இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது விவாசயிகளின் குடும்பங்கள் மட்டுமல்ல தமிழகத்தையே வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லப்பட்டுதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் சித்தோடு ஸ்ரீ கோகுல கிருஷ்ணா திருமண மண்டபத்தில் புதிய இலவச மின்சாரம் பெறுவதற்கான சான்றுகளை மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி இ.ஆ.ப.அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த ஒரு லட்சம் மின்சாரம் பயனாகளில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுமார் 3000 பயானிகள் பயனடைந்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு அ. கணேசமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி. எஸ்.நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் திரு .வி. செல்வராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் நவமணி கந்தசாமி, மேற்பார்வை பொறியாளர்( ஈரோடு மின் பகிர்மான வட்டம்) கு. இந்திராணி, செயற்பொறியாளர் (நகரியம்) சொ.ராமச்சந்திரன், ஈரோடு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் ,விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment