ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த திருமதி. சசிகலா நடராஜன். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 May 2022

ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த திருமதி. சசிகலா நடராஜன்.

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரத்திற்கு திருமதி சசிகலா அவர்கள் சத்தியமங்கலம் அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த போது திருமதி சசிகலா அவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புன்செய் புளியம்பட்டி நகர கழக செயலாளர் திரு பவுண்டரி பழனிச்சாமி அவர்கள் பூங்கொத்து கொடுத்து சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தார். 


இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் புன்செய் புளியம்பட்டி நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நகர செயலாளர் பவுண்டரி பழனிச்சாமி, இளைஞர் அணி செயலாளர் சரவணகுமார், அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மகளீர் அணி துணை செயலாளர் விஜயா மற்றும் நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment