கொமாரபாளையம் ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 May 2022

கொமாரபாளையம் ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்

ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,  கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் மாரியம்மன் கோயில் திடலில் பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு  சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். சரவணன் பி.காம்., அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், கூட்டப் பொருள் வாசிக்கப்பட்டது, உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கூட்டத்தில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் சத்யாபழனிசாமி, கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோ, 1 வது வார்டு உறுப்பினர் கே. பெரியசாமி, இரண்டாவது வார்டு உறுப்பினர் குருநாதாள், 3-ஆவது வார்டு உறுப்பினர் ஆர் சாவித்திரி, 4-வது வார்டு உறுப்பினர் கதிரி, 5 வது  வார்டு உறுப்பினர் கே குமார்,  ஆறாவது வார்டு உறுப்பினர் வடிவேலு, 7வது வார்டு உறுப்பினர் ரத்தனா, 8-வது வார்டு உறுப்பினர் பி சுந்தரம், 9வது வார்டு உறுப்பினர் வசந்தி,  11வது வார்டு உறுப்பினர் விக்னேஷ்வரி,12வது வார்டு உறுப்பினர் கே. கிருஷ்ணமூர்த்தி,  ஊராட்சி செயலாளர் குமார் மற்றும்  மணி, தங்கராஜ், தங்கவேலு, கால்நடைத்துறை, வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை, வருவாய் துறை, அங்கன்வாடி பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment