சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 12 சக்கர லாரிகள் அனுமதி இல்லை என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தி சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள் சங்கம் லாரி டிரைவர் வாழ்வாதாரம் பாதிப்பு லாரிகள் இன்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதைத்தொடர்ந்து திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடையின் காரணமாக தாளவாடி விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், திம்பம் மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு செல்லும் லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கட்சியினர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
இதில் திம்பம் மலைப்பாதை வழியாக விவசாய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், மருத்துவம் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அடையாள அட்டையை காண்பித்து 24 மணி நேரமும் திம்பம் மலைப் பாதையில் பயணிக்கலாம் எனவும் 12 சக்கர லாரிகள் மற்றும் 16.2 டன்னுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வரும் லாரிகள் திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல எப்போதும் அனுமதி இல்லை எனவும் கடந்த 6ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குறிப்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 சக்கர லாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வழங்கிய தீர்ப்பில் 12 சக்கர லாரிகளுக்கு எப்போதும் அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி சத்தியமங்கலத்தில் லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி டிரைவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுநூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment