இன்று வழக்கம்போல் கடந்த 19-5-2022 அன்று காலையில் இயக்கப்பட்ட த.நா.33 /நா 2911 பேருந்து சேற்றுமண்ணில் சிக்குண்டு டயர்கள் வழுக்கி பக்கத்திலுள்ள ஆழமான பள்ளத்தில் விழும்நிலைக்கு இழுத்துச் செல்லப்பட்டு,பேருந்தினுள் இருந்த மற்ற ஊர் பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டதோடு இந்தப்பகுதிக்கு தனியாக பேருந்து ஓட்டவேண்டியதுதானே.
எங்களுக்கும் எதுக்கு இந்தமாதிரி தொல்லை தர்ரீங்க? என டிரைவரிடம் சண்டையிட்டனர், அந்த சாலை முன்னொருகாலத்தில் பெஜலட்டியிலிருந்து இட்டரை வரை செல்லும் சாலை கான்கிரீட்சாலையாக போடப்பட்டிருந்தது, மழைகாரணமாக பழுதடைந்து பத்தாண்டுகளுக்கு மேலாகியும் பராமரிப்பே இல்லாமல் மிகமோசமாக பழுதடைந்துள்ளது.
அந்தச்சாலையில் மலைவாழ்மக்களின் வசதிக்காக போக்குவரத்து கழகம் உத்தரவுப்படி மிகுந்த சிரமங்களுக்கிடையே பேருந்தை இயக்கி வருகிறார்கள், அதேவேளை பெஜலட்டி - இட்டரை வனச்சாலையைப் பராமரிக்கவேண்டிய நெடுஞ்சாலைத் துறை சிறிதும் அக்கறைகாட்டாமல் புதுப்பிக்காமலும், பழுதுநீக்காமலும் அலட்சியப்படுத்தியுள்ளார்கள்.
இட்டரைவரை செல்லவேண்டிய பேருந்து இடையிலுள்ள தடசலஹட்டிவரை மட்டுமே ஓட்டுகிறார்கள், மழைக்காலங்களில், திம்பம் மலைச்சாலை வழிதடை ஏற்பட்டு காலதாமதமான நாட்களிலும் மேற்கண்ட ஊர்களுக்கு பேருந்து இயக்கமுடிவதில்லை, கடந்த 2018 ஆம் ஆண்டில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு நேரில் மனு அளித்துள்ளார்கள்.
அதைவிடக்கொடுமையானது என்னவென்றால் இந்த சாலையில் ஓட்டி ஸ்பிரிங் பிளேட் உடைந்தாலும்,டயர் சேதமானாலும் ஓட்டுனரே முழுப்பொறுப்பு என நிர்வாகத்தால் எங்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. என்று ஒருமுறை தெரிவித்தபோது, தடசலஹட்டி ராசம்மா போன்ற அப்பகுதி மக்களே ஆளாளுக்கு ரூ500/= ரூ1000/= என குறிப்பிட்ட பணம் வசூலித்து வாடகை டிராக்டரில் மண் ஓட்டி சரிசெய்துள்ளனர்.
பின்னர் தரமில்லாத வழுக்கு மண்ணைப் போட்டு பெயரளவுக்கு சாலைப்பழுது பார்ப்பதால், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, செந்நாய்கூட்டம் நிறைந்த மேற்குறிப்பிட்ட வனச்சாலையில் இன்றுவரை பயணிகளுக்கு ஆபத்தான நிலையில் பாதுகாப்பில்லாமல் பேருந்து இயக்கப்படவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது, இதனால் அடிக்கடி பேருந்தின் டயர்கள் சேதமடைவதாலும்,ஸ்பிரிங் பிளேட்களும் ஸ்பிரிங் பெட்களும் உடைவதாலும் பேருந்தை மிகவும் தாமதமாக இயக்கவேண்டியுள்ளது.
எனவே மக்களுக்கு சேவையாற்றும் பொறுப்பு த.நா.அ.போ.கழகத்திற்கு மட்டும் இருந்தால் போதுமானதில்லை, பயணிகள் பேருந்து இயக்கப்படும் சாலையைப் பராமரிக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும்,கட்டுப்படுத்தும் மற்ற அரசுத்துறைகளுக்கும் பொறுப்பு உள்ளது, என்பதை உணர்ந்து கடமையாற்றினால்தான் மக்களுக்கு பாதுகாப்பான சேவை சிறப்பாக செய்யமுடியும்.
பெஜலட்டி, தடசலஹட்டி, இட்டரை மலைச்சாலையை இனிமேலாவது ஈரோடு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து த.நா.போ.கழக அதிகாரிகளும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும்,பேருந்து வசதிமட்டுமே வேண்டும், என மனுஅளிக்கும் சமூக ஆர்வலர்களும் நேரில் சென்று வனச்சாலையை பார்வையிடுவதோடு அவ்வூர் மக்களிடமும் விசாரித்து தன் கடமையை பொறுப்பாக செய்து மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும்.
இந்த உண்மையை உயர்திரு.ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களின் மேலான கவனத்திற்கும்,தமிழ்நாடு அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்று கடைக்கோடி மலைவாழ்மக்களின் வாழ்க்கைக்கு ஊடகங்களாவது உதவ வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

No comments:
Post a Comment