சமூக நல்லிணக்க ரம்ஜான்(ஈத்-மிலன்) நிகழ்ச்சி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 May 2022

சமூக நல்லிணக்க ரம்ஜான்(ஈத்-மிலன்) நிகழ்ச்சி.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஆணை கொம்பு திருமண மண்டபத்தில் அஹ்லே தக்னி சுன்னத் ஜமாஅத் சத்யமங்கலம் மற்றும் ஈரோடு எகனாமிக் சேம்பர் சத்தியமங்கலம் (கிளை)இணைந்து நடத்திய சமூக நல்லிணக்க ரம்ஜான்(ஈத்-மிலன்) நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை ஜாமியா இல்மிய்யா அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியைச் சேர்ந்த கலில்  அஹ்மத் முனீரி ஹஜ்ரத் அவர்களும், ஸ்ரீ லாஸ்ரீ விஜயானந்தா சுவாமிகள், சிவாச்சாரியார் வீர சைவ மடாதிபதி, புனித அருளானந்தர் ஆலயம் அருட்பணி மரிய ஜோசப், சந்திரன், சத்தியமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே. சுப்பிரமணியன், எல். பி. தர்மலிங்கம், பவானிசாகர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜீவா ஓ. சுப்பிரமணியன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் வி. சி. அஜித் குமார் சமூக விஞ்ஞான பள்ளி சமூக நல்லிணக்க நிகழ்ச்சியில் அனைத்து கட்சி சார்ந்த பிரமுகர்கள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.  கே.பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சத்தி நகர செயலாளர் ஸ்டாலின் சிவகுமார், அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் வெங்கடசாமி, சத்தியமங்கலம் அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.என். ஜவகர் அவர்கள், சத்தியமங்கலம் ரோட்டரி கிளப் செயளாலர் என்.பி.டி. எம்.கோபு, ஆடிட்டர் மயில்சாமி,ஆடிட்டர் சின்னசாமி, பல் மருத்துவர் சாமியப்பன்,காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் ஆணை கொம்பு    ஸ்ரீராம், திமுக ஜோசப், திமுக வார்டு உறுப்பினர் மாணிக்கம் உட்பட 200க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர்.

இந்த சமூக நல்லிணக்க நிகழ்ச்சியை சத்தியமங்கலம் ஜமாத்தார் நதி முல்லாகான் அஸ்கர்அலி முன்னின்று நடத்தினார்கள். 

No comments:

Post a Comment