கூலி உயர்வு கேட்டு ஈரோடு மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பேரணி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 May 2022

கூலி உயர்வு கேட்டு ஈரோடு மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பேரணி.

ஈரோடு மாவட்டத்தில் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிர்வாகம் சார்பில் ஆயிரக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கான ஒப்பந்தம் முடிந்து  மூன்றாண்டுகள் மேலாகியும் கூலி உயர்வு உயர்த்தாமல் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்தினர் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதற்காக சுமை தூக்கும் தொழிலாளர்கள் சார்பில் ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்கங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஏற்கனவே இது குறித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே  சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டும், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும், ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்கங்கள் சார்பில் கோரிக்கை பேரணி நடைபெற்றது.


ஈரோடு ஸ்டார் தியேட்டர் அருகே பேரணி நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தெய்வநாயகம் தலைமை தாங்கினார். சுமை தூக்குவோர் மத்திய சங்கத்தின் தலைவர் விஜயகுமார், கவுரவ தலைவர் ஆறுமுகம், தொ.மு.ச.பேரவை செயலாளர் கோபால், மாவட்ட தலைவர் தங்கமுத்து, மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ வும், சுமை தூக்குவோர் மத்திய சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.எஸ்.தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். பின்னர்  கோரிக்கையை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்துக்கு எல்லை மாரியம்மன் கோவில் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதுவரை சுமைதூக்கும் தொழிலாளர்கள்  ஊர்வலமாக சென்றனர். 


பின்னர் கே.எஸ்.தென்னரசு தலைமையில் முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டும் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை அடங்கிய மனுவை   வழங்கினார்கள்.

No comments:

Post a Comment