ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் வனச்சரக அலுவலர் பணி புரிந்த வரும் சதீஷ் அவர்களுக்கு இந்திய பல்லுயிர் பன்மய விருது வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் வனத்துறையின் காரங்காடு சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தற்பொழுது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் வனச்சரக அலுவலராக பணிபுரிந்து வரும் திரு.சதீஷ் அவர்களுக்கு இந்திய பல்லுயிர் பன்மய விருது ( India Biodiversity Award) தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தினால் ( National Biodiversity Authority) சர்வதேச பல்லுயிர் பன்மய நாளன (மே 22 ) இன்று சென்னை கலைவானர் அரங்கத்தில் வழங்கப்பட்டது.
மத்திய மற்றும் மாநில சுற்றுச்சுழல், வனம் மற்றும் காலநிலை மற்றத்துறை அமைச்சர்களால் இன்று இந்தியாவிலுள்ள 8 நபர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. கொரோனா தொற்றின் காரணமாக சென்ற வருடம் நடக்கவிருந்த இந்த விழாவானது இந்த வருடம் சென்னையில் நடைபெற்றது.
No comments:
Post a Comment