இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியத்தில் கோசனம் ஊராட்சி மற்றும் கெட்டிச்செவியூர் ஊராட்சி சமுதாய நலக் கூடத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இணைந்து நடத்திய கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் நம்பியூர் ஒன்றிய திமுக பொறுப்பாளர், நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல். ப. செந்தில்குமார் அவர்கள் கலந்துகொண்டு விவசாய பெருமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விவசாய பெருமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள், நிகழ்வின் போது ஒன்றிய கழக பொருளாளர் என். சி சண்முகம், மாவட்ட பிரதிநிதி எஸ்.பி செல்வராஜ், கோசனம் பி.வி. இளங்கோ, கொசுவலை பி.கே. பழனிச்சாமி, வளர்ச்சி பி.வி. உமாசங்கர், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு பணியாளர்கள், திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
No comments:
Post a Comment