பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு தேமுதிக ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 May 2022

பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு தேமுதிக ஆர்ப்பாட்டம்.

ஈரோடு மாவட்டம், ஈரோட்டில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு சம்பத் நகர் பகுதி செயலாளர் வி. சி. சரவணன் வரவேற்புரை ஆற்றினார்.  


ஈரோடு மாநகர மாவட்ட கழக செயலாளர் எஸ். ஆனந்த் எம்.எஸ்.சி, ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் கே.முருகன், ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பீ.கே. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள், தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையேற்று கண்டன உரையாற்றினார். 


மாநில அவைத்தலைவர் டாக்டர்.வி. இளங்கோவன்,  மாநில  கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஏ. மோகன்ராஜ், மாநிலத் துணைச் செயலாளர் சுதீஸ், மாநிலத் துணைச் செயலாளர் ப. பார்த்தசாரதி, மாநிலத் துணைச் செயலாளர் ஏ.எஸ். அக்பர், சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் , தேசிய உயர் மட்ட குழு உறுப்பினருமான ஏ. ஆர். இளங்கோவன், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்  பா. கோபால், கோவை மாநகர மாவட்ட கழக செயலாளர் சிங்கை கே.சந்துரு,கோவை தெற்கு மாவட்ட  செயலாளர் பி.கே தினகரன், கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம். சிவராமன், சேலம் மாநகர மாவட்ட கழக செயலாளர் என். ராதாகிருஷ்ணன், சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே. சுரேஷ்பாபு, திருப்பூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் ஏ.இராமகிருஷ்ணன், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் டி. ஆறுச்சாமி,  திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் டி.பிரசாந்த் குமார், கரூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் அரவை எம்.முத்து, கரூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.பி. சிவம்ராஜேந்திரன், நாமக்கல் வடக்கு மாவட்ட கழக செயலாளர் டி.எஸ். விஜய சரவணன், நாமக்கல் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே ராமலிங்கம், கோபி ஒன்றிய செயலாளர் நடராஜ், நம்பியூர் ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, பவானிசாகர் ஒன்றிய செயலாளர் தங்கவேல், சத்தி ஒன்றிய செயலாளர் சஜித், அந்தியூர் ஒன்றிய செயலாளர் சுதாகர், புளியம்பட்டி நகர  செயலாளர் வழக்கறிஞர் தாமோதரசாமி மற்றும் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.


- ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment