ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் . சத்தியமங்கலம் வடக்கு பகுதியில் சட்டவிரோதமாக தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக பூபதி என்பவர் சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில், சத்தியமங்கலம் வடக்கு பேட்டை தண்டுமாரியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்த விஜயகுமார் ( 47 ) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது. அவர் சட்டவிரோதமாக கேரள லாட்டரி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 350 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூ 8190 பறிமுதல் செய்தனர்.
- ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment