இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் மற்றும் தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 May 2022

இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் மற்றும் தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ரிலீப் அறக்கட்டளை சார்பில் இயக்கப்படும் புதிய இலவச ஆம்புலன்ஸ் சேவையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிசாகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. எல் சுந்தரம் மற்றும் சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

சத்தியமங்கலம் ரிலீப் டிரஸ்ட் என்.ஆதில், கோணமலை ஊராட்சி வார்டு உறுப்பினர் பி. மாரிமுத்து  முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்பை தவிர்க்க இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சத்தியமங்கலம் காவல் துறையினர் சார்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சத்தியமங்கலம் எஸ் ஆர் டி கார்னரில் துவங்கிய இந்த ஊர்வலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைவீதி கோட்டு வீரம் பாளையம் , மணிக்கூண்டு வீதி, வடக்கு பேட்டை, நிர்மலா தியேட்டர் ரோடு முக்கிய வீதிகளில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.


இந்த விழிப்புணர்வு பேரணியில் சத்தியமங்கலம்  ரிலீப் டிரஸ்ட் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் சத்தியமங்கலம் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment