இந்த முகாமில், தாளவாடி தாலுகாவுக்கு உள்பட்ட மல்லன்குழி, பனகஹள்ளி, கெட்டவாடி, மரூர், திகினாரை, பையண்ணபுரம், தலமலை, இக்கலூர், ஆசனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இந்த முகாமில் விலையில்லா வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஹெச். கிருஷ்ணனுண்ணி. இ.ஆ.ப. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் உள்ள வருவாய் பதிவேடுகள், பட்டா, சிட்டா, பதிவேடுகள், வரி வசூல் பதிவேடு, நிலஅளவை பதிவேடு, வருவாய் வரைபட பதிவேடு ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார் நலத்திட்ட உதவிகள் முகாமில் 14 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களும், 41 பேருக்கு நத்தம் பட்டா மாறுதல் ஆணையும், 55 பேருக்கு ரூ.38 லட்சத்து 8 ஆயிரத்து 615 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார். இதில் நில அளவை உதவி இயக்குனர் சுப்பிரமணி, தாளவாடி தாசில்தார் உமாமகேஷ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் ஈரோடு தாலுகா அலுவலகத்திலும் ஜமாபந்தி முகாம் நடந்தது. இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர் நாளை (வியாழக்கிழமை) வரையும், அந்தியூர் தாலுகாவில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரையும், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை ஆகிய தாலுகாக்களில் வருகிற 31-ந் தேதி வரையும், சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகள் நீங்கலாக முகாம் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment