ஈரோடு மாவட்டம், திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் திராவிட கழகத்தின் சார்பில் வங்கி எழுத்தர் பணிக்கு தமிழ் தேர்ச்சி கட்டாயமில்லையா? தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும் ஒன்றிய அரசின் சதியை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாணவரணி தலைவர் மா.சூர்யா பி.ஏ.பி. எல், தலைமை தாங்கினார், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் அ.அஜித்குமார் முன்னிலை வகித்தார், ஈரோடு மண்டல இளைஞரணி செயலாளர் ப.வெற்றிவேல் ஆர்ப்பாட்ட தொடக்க உரை ஆற்றினார்.
மாவட்ட தலைவர் ந.சிவலிங்கம் கண்டன உரை நிகழ்த்தினார்.இறுதியாக மாவட்ட மாணவர் கழக செயலாளர் த.எழில் அரசு (பி.ஏ) நன்றியுரை ஆற்றினார், முடிவில் "ஆர்ப்பாட்டம் ஏன் - ஏன்? துண்டறிக்கையை மக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் இளைஞரணி மாணவரணி மகளிர் பாசறை தோழர்கள் திரளாக கலந்து கொண்டு எழுச்சி முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment