சத்தியமங்கலம் பனியன் தொழிலாளர்கள் நூல் விலையை கட்டுப்படுத்த கோரி வேலை நிறுத்த போராட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 May 2022

சத்தியமங்கலம் பனியன் தொழிலாளர்கள் நூல் விலையை கட்டுப்படுத்த கோரி வேலை நிறுத்த போராட்டம்.

ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம்,   புளியம்பட்டி, பவானிசாகர் அதை சுற்றியுள்ள பசுவா பாளையம்,  ராஜா நகர், கோட்டு வீரம்பாளையம்,  மூணு வீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட பனியன் தயாரிப்பு நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக கடுமையான நூல் விலை ஏற்றம் இருந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த கோரி இரண்டு நாட்களாக அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .இதுகுறித்து சத்தியமங்கலம் வட்டார தையல் உரிமையாளர் கூட்டமைப்பு,  பனியன் தயாரிப்பு நிறுவனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாங்கள் திருப்பூர் பகுதியில் பெரிய நிறுவனங்களிலிருந்து பனியன் துணிகளை மொத்தமாகவும் எடுத்து துணி வெட்டி தைத்து அயன் பேக்கிங் செய்து விற்பனைக்கு தயார் செய்து கொடுக்கிறோம். தற்போது சூழ்நிலையில் பெட்ரோல்,  டீசல் விலை உயர்வு தொழிலாளர்கள் கூலி உயர்வு , தையல் நூல் விலை உயர்வு காரணத்தால் எங்களது தொழில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சத்தியமங்கலம்,  பவானிசாகர் மற்றும் அதை சுற்றியுள்ள வட்டார பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர் . உடனடியாக அரசு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.  என வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment