இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்னதாக புளியம்பட்டி நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர், மாணவிகளிடம் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆ ராசா அவர்கள் கலந்துரையாடினார். இதன் பின்னர் புதிய நகராட்சி அலுவலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வுப் பணியை பார்வையிட்டார். இதன் தொடர்ச்சியாகக் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் புதிதாக குப்பை தரம் பிரிக்கும் இடத்தையும் பார்வையிட்டார். புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் வகையில் அமையவுள்ள பவானிசாகர் அணைப்பகுதியில் அமைக்கப்படவுள்ள குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
மேலும் இவ்விழாவில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் அவர்களும், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கீதா நடராஜன் அவர்களும், புளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் சக்திவேல் அவர்களும், புளியம்பட்டி நகராட்சி பொறியாளர் கதிர்வேல் அவர்களும் மற்றும் புளியம்பட்டி நகராட்சி வார்டு உறுப்பினர்களும், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment