மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 May 2022

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்.

ஈரோடு  மாவட்டம், நம்பியூர் ஒன்றியம், குருமந்தூர் அரசு நடுநிலை பள்ளியில், தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை நடத்தும் பிறப்பு முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

நம்பியூர் ஒன்றிய திமுக பொறுப்பாளரும்,  நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் மெடிக்கல் ப.செந்தில்குமார் மருத்துவம் முகாமில் கலந்து கொண்டு  குழந்தைகளின் உடல் நலனை விசாரித்து குழந்தைகள் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையை வழங்கினார்.

அங்கு வருகை புரிந்த குழந்தைகளின் பெற்றோர்களிடம் குழந்தைகளின் நலனுக்காக எந்நேரமும் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என்றும், பள்ளிக்கூடத்தில் அமைந்துள்ள சத்துணவு கூடம் பழுதடைந்துள்ளதை பார்வையிட்டு விரைவில் சரி செய்யும் பணியானது தொடங்கப்படும் என்றும், மருத்துவ முகாமினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த அரசு பணியாளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார். 


இந்நிகழ்வின் போது ஒன்றியக் கழக துணைச் செயலாளர் மைக். பழனிச்சாமி,  தலைமை பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி , ஆயிபாளையம்  கிளைக் கழகச் செயலாளர் மயில் (எ) மகாலிங்கம்மற்றும் அரசுப்பணியாளர்கள் கழக உடன்பிறப்புகள்,  பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். 

No comments:

Post a Comment