மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 30 May 2022

மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அதிமுக சார்பில் நகர நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற நகர நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ,மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சத்தியமங்கலம் நகர செயலாளர் ஓ.எம். சுப்பிரமணியம் தலைமை தாங்கினார், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்  செயலாளரும், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. பண்ணாரி பி.ஏ, முன்னிலை வகித்தார்.

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர், கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் சிறப்புரை ஆற்றினார் இதைதொடர்ந்து சத்தி நகர நிர்வாகிகள் உடன் கழக வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்தார் மேலும் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்களும், அம்மா முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்களும் சுமார் 50 பேர் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்கள். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 


இவ்விழாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. காளியப்பன், மாநில மகளிர் அணி செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா, முன்னாள் சத்தி சட்டமன்ற உறுப்பினர் ஏ.டி. சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழு 2-வது வார்டு உறுப்பினர் பி.பிரபாகரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் வெங்கிடுசாமி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி, பவானிசாகர் ஒன்றிய பெருந்தலைவர் வி.ஏ. பழனிச்சாமி, சத்தி ஊராட்சி ஒன்றியக் குழு 3-வது வார்டு உறுப்பினரும் சத்தி  கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.எம். எஸ். நாச்சிமுத்து, சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் சி. என்.மாரப்பன், சத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ், கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன்,  சிக்கரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, அரியப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் தேவ முத்து மற்றும் அதிமுக நிர்வாகிகளும், உறுப்பினர்களும், மகளிர் அணியினரும் திரளாக கலந்து கொண்டார்கள்.


- ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment