ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமையிலும், சத்தி ஒன்றிய பொறுப்பாளரும், சத்தி ஒன்றிய பெருந்தலைவர் கே.சி பி. இளங்கோ ஏற்பாட்டில் இண்டியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். செந்தில் தலைமையில் மதிமுகவில் இருந்து 100 பேரும், மாக்கிணாம் கோம்பை ஊராட்சி மன்றத் தலைவர் அம்மு ஈஸ்வரன் தலைமையில் அதிமுகவில் இருந்து 150 பேரும், அரசூர் சந்தன குமார் தலைமையில் அம்மா முன்னேற்றக் கழகத்திலிருந்து 50 பேரும் திமுகவில் இணைந்தார்கள்.
இவர்களுக்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இவ்விழாவில் திமுக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பலர் கலந்து கொண்டார்கள்.
- ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவமூர்த்தி.

No comments:
Post a Comment