ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் உட்கோட்டம், நம்பியூர் ஒன்றியம், எம்மாம்பூண்டி ஊராட்சி வரப்பாளையம் கிராமம், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பகுதியில் சுமார்(35) குடும்பத்துக்கு மேற்பட்டவர்கள் சுமாராக 75 ஆண்டுகளாக அங்கே வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் குடியிருக்கும் வீட்டில் வசதி இல்லாமல் ஒரே வீட்டில் அடர்த்தியாக வாழ்ந்து வருகிறார்கள் இவர்கள் இதுவரையில் பல்வேறு துறையினரை சந்தித்து மனு கொடுத்தும் இதுவரையில் இவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வில்லை.
இது சம்பந்தமாக இன்று நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் திருமதி கௌசல்யா அவர்களிடம்கிராம மக்கள் 28பேர் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் அவர்கள் இந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் இலவச பட்டா வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்த மனு அளித்தபோது ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பெ. பொன்னுச்சாமி தலைமையில் ஆதித்தமிழர் பேரவை ஈரோடு வடக்கு மாவட்டத்தின் நிர்வாகிகள் நம்பியூர் ஒன்றிய செயலாளர் கு. சேகர், நம்பியூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ர. தங்கமணி, நம்பியூர் ஒன்றிய துணைத்தலைவர்பொ. பாலசுப்ரமணி மற்றும் 45 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
- ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment