ஈரோடு மாவட்டம் பவானி தாலுக்கா கவுந்தப்பாடியில் மற்ற ரோடுகளை காட்டிலும் ஆப்பக்கூடல் செல்லும் சாலை இரண்டு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள முக்கிய சாலையாக விளங்குகிறது மற்றும் பொதுமக்கள் அதிகம் பயண்படுத்தும் முக்கிய சாலையாகவும் உள்ளது எனினும் இச்சாலை மற்ற சாலைகளைவிட மிக குறுகளாகவும் வாகன நெரிசல் மிகுந்ததாகவும் உள்ளது, இதனால் சாலை விபத்துக்கள் நடக்கும் அபாயமும் உள்ளது, எனவே நெடுஞ்சாலைத்துறை அளவுப்படி சாலை ஆக்கிரமிப்புக்களை அகற்றி சாலை விரிவாக்கம் செய்ய வழியுறுத்தியும் இப்பகுதியில் தரமான உறுதிதன்மையுள்ள சாக்கடை வசதியை ஏற்படுத்தக்கோரியும் சாலை மறியல் போராட்டம் 18/5/2022 மாலை 3:00மனிக்கு கவுந்தப்பாடியில் மதிமுக ஒன்றிய செயளாலர் திரு.சோ.வீரக்குமார் அவர்கள் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மதிமுக தொண்டர்கள் திரு.அண்ணாதுரை ஓட்டுனர் பிரகாஷ் செந்தில் குமார் செல்வம் சிவா இளவரசன் கந்தசாமி மூர்த்தி அம்மானுல்லா சுந்தரம் வெங்கடேஷ் சிரஞ்சீவி அய்யம்பாளையம் அண்ணாதுரை மற்றும் பலர் கவுந்தப்பாடி காவல்துறையினரால் கைது செய்யயப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டார்கள்.
No comments:
Post a Comment