ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஒன்றியம், அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டில் உள்ள பவானி ஆற்று வீதியில் சுமார் ரூ. 33 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜைக்கு அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் திருமதி. எஸ். மகேஸ்வரி செந்தில்நாதன் அவர்கள் தலைமை தாங்கினார்.
அரியப்பம்பாளையம் பேரூராட்சி துணைத்தலைவர் பழனிச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ், திராவிட முன்னேற்ற கழகத்தின் அரியப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் ஏ.எஸ்.செந்தில்நாதன், ஆகியோர் முன்னிலை வகித்தார். மற்றும் அரியப்பம்பாளையம் பேரூராட்சி 10 வது வார்டு உறுப்பினர் திருமதி. எம். கலைவாணி, முருகன், பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment