ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் வட்டம்,கரட்டூர் விக்கிரமாதித்தன் கபாடிக் குழு சார்பாக 10 ஆம் ஆண்டு மாநிலம் தழுவிய கபாடிப் போட்டி 14 சனி,15 - 5 - 2022 ஞாயிறு இருநாட்கள் நடத்தப்பட்டது. ஊர்த்தலைவர் திரு. ப.கிருஷ்ணசாமி அவர்கள் உட்பட கரட்டூர் பொதுமக்களும்,முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றதுடன் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்களும்,கபாடி ஆர்வலர்களும் வருகை புரிந்து சிறப்பித்தனர். தமிழகத்தின் தலைசிறந்த கபாடி அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், இறுதியாட்டத்தில் வெற்றிவாகை சூடி முதலிடம் பிடித்த பி.மேட்டுப்பாளையம் வண்ணத்தமிழ் அணிக்கு ₹12,000/= பணமுடிப்புடன் ஏழு அடி உயரமுள்ள ₹12,000/= மதிப்புள்ள சொந்தக் கோப்பையும் வழங்கப்பட்டது.
முத்தான முதல் பரிசு ரூ 12,000/= வழங்கியவர் திரு பி அருண் பாலாஜி ஜமுனா கரட்டூர். ரூ 12 ஆயிரம் மதிப்புள்ள ஏழு அடி சொந்த கோப்பை வழங்கியவர். பருப்பு காரர்தோட்டம் தெய்வ திருவாளர்கள் சென்னி யப்ப கவுண்டர்- பாப்பம்மாள் நினைவாக அவர்களது குடும்பத்தினர் . 2 ம் பரிசாக ₹8,000/= பணமுடிப்புடன்,₹8,000/= மதிப்புடைய ஆறு அடி சொந்தக்கோப்பையும் சத்தியமங்கலம் விக்கிரமாதித்தன் அணிக்கு வழங்கப்பட்டது. இணையான இரண்டாம் பரிசு ரூ 8000/= வழங்கியவர் எஸ் எஸ் வி சண்முகசுந்தரம் கரட்டூர். ரூ 8000/= மதிப்புள்ள ஆறடி சொந்த கோப்பை வழங்கியவர் திரு. கே எஸ். ஸ்ரீதர் சத்தியமங்கலம்.
மூன்றாமிடம் பிடித்த வெள்ளோடு மனமகிழ்மன்றம் அணிக்கு ரூ6,000/= பணமுடிப்புடன் ,ரூ6000/= மதிப்புள்ள 5அடி சொந்தக் கோப்பையும் வழங்கப்ட்டது.முறையான மூன்றாம் பரிசு ரூ 6000/= வழங்கியவர் திரு கே சி பி இளங்கோ அவர்கள் சத்தி ஒன்றியக்குழு சேர்மன் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர். ரூ 6 ஆயிரம் மதிப்புள்ள 5 அடி சொந்தக் கோப்பை வழங்கியவர் தெய்வத் திருவாளர்கள் கே கே சென்னியப்ப கவுண்டர் அங்கம்மாள் நினைவாக அவரது குடும்பத்தினர் .
நல்லதொரு நான்காம் பரிசு ரூ 4000 வழங்கியவர் திரு கே எஸ் கிருஷ்ணசாமி ஊர் கவுண்டர் கரட்டூர். ரூ 4000 மதிப்புள்ள 4 அடி சொந்த கோப்பை வழங்கியவர்.திரு வி சி. அஜித் குமார் வழக்கறிஞர் மற்றும் வரி நிதி மேலாண்மை திட்ட ஆலோசகர் கரட்டூர், சிறந்த "ரைடராக" தேர்ந்தெடுக்கப்பட்ட பி. மேட்டுப்பாளையம், வண்ணத்தமிழ் அணிவீரர் தினேஷ் அவர்களுக்கும், சிறந்த தடுப்பு ஆட்டக்காரராக சத்தியமங்கலம், விக்கிரமாதித்தன் அணிவீரர் சுபானந்தன் அவர்களுக்கும் சிறப்பு கோப்பை மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசளித்து பாராட்டப்பட்டனர்.
கபாடி ஒருங்கிணைப்பாளர் திரு. கே.வி.குணசேகரன் அவர்கள் தலைமையில் கபாடிவீரர் திரு.ரஞ்சித்,திரு.மௌலீஸ்வரன் உட்பட பலரும் சிறப்பாக களப்பணியாற்றி கபாடிப் போட்டியை 16-5-2022 இன்று அதிகாலை நிறைவு செய்தனர். இவ்விழாவில் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் விழாக்குழுவினர், கரட்டூர் ஊர் பொதுமக்கள், கரட்டூர் நண்பர்கள் கிரிக்கெட் குழு உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment