ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் உட்கோட்டம் நம்பியூர் ஒன்றியம் சுண்டக்கா பாளையம் ஊராட்சி சிட்டாம்பாளையம் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் சுமார் 150 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள் அவர்களுக்கு போதிய இடவசதி இல்லாமல் ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் மூன்று குடும்பங்கள் என்று அடர்த்தியாக வாழ்ந்து வருகிறார்கள் இது சம்பந்தமாக நம்பியூர் தாலுகா ஆபீசில் தலைமையிட தாசில்தார் அவர்களிடம் இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் என்று 25க்கும் மேற்பட்டவர்கள் ஆதித்தமிழர் பேரவை ஈரோடு மேற்கு மாவட்டத்தின் சார்பில் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பெ.பொன்னுசாமி தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.
இதில் ஆதித்தமிழர் பேரவை நம்பியூர் ஒன்றிய நிர்வாகிகள் கு.சேகர், ஒன்றிய செயலாளர் ஸ்டார் சேகர்(எ) ஆறுமுகம், ஒன்றிய தலைவர் ஒன்றிய பொறுப்பாளர்கள் ப.சண்முகம், மா.சுப்பிரமணியம், மா. பிரகாஷ், செ. தேவராஜ், ப. பழனிச்சாமி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சிட்டாம்பாளையம் பகுதி மக்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment