பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 May 2022

பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் (26.05.2022) மாவட்ட ஆட்சித் தலைவர் .ஹெச். கிருஷ்ணனுண்ணி  இஆப, அவர்கள், ரூ. 95.15 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித் தலைவர்  ஹெச். கிருஷ்ணனுண்ணி இஆப, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அரசூரில் சந்தை மேம்பாடு செய்தல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். 


மேலும், அரசு ஊராட்சி தாசநாயக்கனூர் மற்றும் குள்ளம்பாளையம் ஆதிதிராவிடர் காலனி ஆகிய பகுதிகளில் தூய்மை பாரத இயக்கம் திரவக்கழிவு வேளாண்மை இயக்கம் மற்றும் 15–வது நிதிக்குழு மாநில நிதியின் கீழ் தலா ரூ. 1.30 இலட்சம் மதிப்பீட்டில் கிடைமட்ட    உறிஞ்சிக்குழி மற்றும் ரூ.1.30 இலட்சம் மதிப்பீட்டில் செங்குத்து   உறிஞ்சிக்குழி அமைக்கப்பட்டுள்ளதையும், தொடர்ந்து அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வார்டு எண் 13 –கஞ்சா நாயக்கனூர் முதல் எல்லை வாய் காந்திநகர் வரை ரூ. 42.95 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ள தையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கேம் தொண்டாமுத்தூர் பகுதியில் ரூ. 34.50 இலட்சம் மதிப்பீட்டில்  பேவர் பிளாக் அமைக்கப்பட்டுள்ள தையும், 15வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் நேரு நகர் பகுதியில் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டுள்ள தையும், என மொத்தம் ரூ 95.15 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 


மேலும் அதே பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்டு, அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, சிக்கரசம்பாளையம் ஊராட்சி சிக்கரசம்பாளையம் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தனிநபர் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 


இந்த ஆய்வின் போது, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே. சி.பி.இளங்கோ, சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், மணிமாலா, அரியப்பம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment