பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட், விசிக ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 May 2022

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட், விசிக ஆர்ப்பாட்டம்.

ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு வேலையின்மை வெறுப்பு அரசியல் செய்யும் மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி பி ஐ எம் சக்தி தாலுகா செயலாளர் கே எம் விஜயகுமார், சிபிஐ ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் இரா. ஸ்டாலின் சிவகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் துரை இளங்கோவன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐஎம் மேணாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் க. இரா. திருத்தணிகாசலம், சி பி ஐ சத்திய ஒன்றிய செயலாளர் எஸ் நடராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி பவானிசாகர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன். தம்பிராஜ் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்ட உரையாற்றினார்கள். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஐஎம் சத்தி மலை வட்டார செயலாளர் துரைசாமி, சிபிஐ சக்தி வடக்கு ஒன்றிய செயலாளர் எம். சுரேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆம்னி துரை,  சிபி ஐ எம் பவானிசாகர் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, சிபிஐ சத்தி நகர செயலாளர் எஸ்.ஐமேஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் நில உரிமை மீட்பு இயக்கம் சாமிநாதன், சி பி ஐ எம் மாவட்ட குழு உறுப்பினர் சடையப்பன், சிபிஐ பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சக்தி தெற்கு ஒன்றிய செயலாளர் பெரி காளையன், மற்றும் சடைய லிங்கம்,  வாசுதேவன், ராஜேந்திரன், ராஜ் வேலுமணி,  கடம்பூர் ராமசாமி,  சரவணகுமார்,  அஷ்ரப், சிறுத்தை சிவா, பொன் சத்தியமூர்த்தி,  நாராயணசாமி,  சுப்பிரமணி ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.


- ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சிவன்முர்த்தி. 

No comments:

Post a Comment