சலங்பாளையம் ஒருங்கிணைந்த துப்புரவு பணி முகாம் மற்றும், சைக்கிள் பேரணிக்கு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 May 2022

சலங்பாளையம் ஒருங்கிணைந்த துப்புரவு பணி முகாம் மற்றும், சைக்கிள் பேரணிக்கு.

ஈரோடு மாவட்டம், பவானி ஒன்றியம், சலங்கபாளையம் முதல் நிலை பேரூராட்சியின் சார்பாக ஒருங்கிணைந்த துப்புரவு பணி முகாம் மற்றும், சைக்கிள் பேரணிக்கு சலங்கபாளையம் பேரூராட்சித் தலைவர் திருமதி. மணிமேகலை பழனிச்சாமி தலைமை தாங்கினார். 


சலங்கபாளையம் முதல் நிலை பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். சலங்கபாளையம் முதல் நிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் இரண்டாவது வார்டு உறுப்பினரும், வரி மதிப்பீட்டு குழு உறுப்பினர் திருமதி கலைவாணி, 3வது வார்டு உறுப்பினரும், வரி மதிப்பீட்டு குழு உறுப்பினர் செந்தில்குமார், வேலுமணி, மேகநாதன், நாலாவது வார்டு கிளை கழக செயலாளர் கே எம். தனசேகரன் சலங்கபாளையம் உயர்நிலை மாணவர்கள் உதவி தலைமையாசிரியர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சைக்கிள் பேரணி மற்றும் துப்புரவு பணி முகாமை துவக்கி வைத்தார்கள். 


ஒருங்கிணைந்த தூய்மை பணி திட்டத்தின் கீழ் செந்தாம்பாளையம் மகாமாரியம்மன் கோயில் வளாகத்தில் சுத்தம் செய்யப்பட்டது. இவ்விழாவில் சலங்கபாளையம் முதல் நிலை பேருராட்சி துப்புரவு பணியாளர்கள்,  பசுமை நிழல்கள் நண்பர்கள்,  தன்னார்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment