மாவீரன் பொல்லான் பேரவை, அருந்ததியர் இளைஞர் பேரவையின் புதிய பெயர் பலகை திறப்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

மாவீரன் பொல்லான் பேரவை, அருந்ததியர் இளைஞர் பேரவையின் புதிய பெயர் பலகை திறப்பு.

ஈரோடு மாவட்டம் ஈரோட்டில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் பொல்லான் பேரவை, அருந்ததியர் இளைஞர் பேரவையின் புதிய பெயர் பலகையும், கல்வெட்டும் ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவீரன் பொல்லான் பேரவை, அருந்ததியர் இளைஞர் பேரவைத் தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் கலந்து கொண்டு புதிய பெயர் பலகையும் கல்வெட்டையும் திறந்து வைத்தார். 


இதுகுறித்து அவர் கூறுகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகஜீவன்ராம் ஜனநாய மக்கள் இயக்கத்தின் நிறுவனத்தலைவர் ராமன் அம்பேத்கர் பிறந்த நாளில் நினைவாக காளைமாடு சிலை பகுதியில் பெயர்ப்பலகை மற்றும் கல்வெட்டு திறந்து வைத்தார் 44 ஆண்டுகளாக சமூகப் பணியை செய்து பட்டியலின் மக்கள் மேம்பாட்டுக்காக போராட்டங்கள் மாநாடுகளை நடத்தினார் அவர் திறந்து வைத்த கல்வெட்டுகளை புதுப்பித்து புது கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.


வருகிற ஜூலை 17ஆம் தேதி 217 வது நினைவு தினம் அரசலூர் அருகே நல்லமங்கா பாளையத்தில் நடைபெற உள்ளது மேலும் அடுத்த மாதம் பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சென்னிமலை, கொடுமுடி, மொடக்குறிச்சி, உள்பட 100க்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் பலகை திறப்பு விழா கொடியேற்று விழா நடைபெற உள்ளது. புதிய நிர்வாகிகள்  தேர்வு செய்யப்பட உள்ளார்கள் இவ்விழாவில் பேரவை பொதுச் செயலாளர் எம். கே ஆறுமுகம், சண்முகம், மாநில துணைத்தலைவர் கண்ணையன், முத்துசாமி, மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர்கள் அண்ணாதுரை, வீரமணி மற்றும் இளைஞரணி மகளிரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment