ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பருவ மழைக்கு முந்தைய வன உயிரினங்களின் கணக்கெடுப்புப் பணி 27.06.2022 முதல் 02.07.2022 ஆகிய ஆறு நாட்கள் திட்டமிடப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குநர் திரு. ராம சுப்பிரமணியன் இ. வ. ப. மற்றும் துணை இயக்குநர் திரு. தேவேந்திர குமார் மீனா இ. வ. ப. அவர்களின் வழிக்காட்டுதலின் அடிப்படையில் ஆசனூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட தாளவாடி, ஜீரகஹள்ளி, ஆசனூர், மற்றும் கேர்மளம் ஆகிய வனச்சரகங்களில் மேற்படி கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
இதில் 1,3,5 ஆகிய நாட்களில் ஊன் உண்ணிகளான புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் கணகெடுப்பும் 2,4,6 ஆகிய நாட்களில் தாவர உண்ணிகளான யானை, காட்டு மாடு, மான் போன்ற வனவிலங்குகளின் கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும்.இந்த கணகெடுப்பானது வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக் காப்பாளர்கள், வனக் காவலர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஆகிய வனப் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment