ஈரோடு மாவட்டம் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக தமிழக அரசு மீன்பிடி இல்லா காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது போல் பனைத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத 6மாத காலத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து தமிழக பனை தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் பனைத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லா காலங்களில் நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதிமொழி கொடுத்து உள்ளார். இதனை தொடர்ந்து தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் அவர்கள் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் பனைத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் திரு. எர்ணாவூர் நாராயணன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.

No comments:
Post a Comment