சமூக போராளி சகுந்தலா தங்கராஜ் அவர்களுக்கு மாவீரன் பொல்லான் 217 வது நினைவஞ்சலி நாள் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 June 2022

சமூக போராளி சகுந்தலா தங்கராஜ் அவர்களுக்கு மாவீரன் பொல்லான் 217 வது நினைவஞ்சலி நாள் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

ஈரோடு ‌மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த அருந்ததியர் சமூகத்தில் பிறந்த பெண் சகுந்தலா தங்கராஜ் அவர்கள் கடந்த 20 வருடங்களாக ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராகவும் சமூக நீதிக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறார், இவர் தலித் விடுதலைக் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

கடந்த2017 ஆம் ஆண்டு மாவீரன் பொல்லான் நினைவஞ்சலி செலுத்த காவல்துறை தடை விதித்து தடையை மீறி நினைவு அஞ்சலி செலுத்திய மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் அவர்களை காவல்துறை கைது செய்தது, இதனை கண்டித்து போராளி சகுந்தலா தங்கராஜ் அவர்கள் ஈரோடு மாவட்ட எஸ்பி மற்றும் டிஎஸ்பி ஆகியோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினார். மாவீரன் பொல்லான் வரலாறு மீட்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் கடந்த 7 வருடங்களாக மாவீரன் பொல்லான் மணிமண்டபம் அமைக்க கோரி நடைபெற்ற  அனைத்து போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொண்டு தனது வீர முழக்கங்களை எழுப்பி காவல்துறையை அச்சப்பட வைத்தவர் சகுந்தலா தங்கராஜ் அவர்கள்.


சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் 217 வது நினைவஞ்சலி நாள் (ஆடி 01) 17-7-2022 (இடம் - நல்ல மங்கா பாளையம் அரச்சலூர் ஈரோடு மாவட்டம்) அழைப்பிதழ் தலித் விடுதலை கட்சியின் பொதுச் செயலாளர் எம் பி செங்கோட்டையன் அவர்களுக்கும் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் சகுந்தலா தங்கராஜ் அவர்களுக்கும், மாவீரன் பொல்லான் பேரவை மற்றும் அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன்  அழைப்பிதழையும் மாவீரன் பொல்லான் திருவுருவப் படத்தையும் நினைவு பரிசாக வழங்கினார்.

 

- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment