நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் மற்றும் பவானி சாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி., பி. ஏ. அவர்கள் ஆகியோர் தலைமை தாங்கி பூமிபூஜையை தொடங்கி வைத்தார்கள். ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். சரவணன் முன்னிலை வகித்தார், இவ்விழாவில் முன்னாள் பால்வளத் தலைவர் கே. கே. காளியப்பன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் தமிழ்செல்வி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் வெங்கிடுசாமி, பவானிசாகர் ஒன்றிய செயலாளர் வி.ஏ. பழனிச்சாமி , சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் என். என். சிவராஜ், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் என்.எம்.எஸ். நாச்சிமுத்து, மாவட்ட கவுன்சிலர் பிரபாகரன், ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பழனிச்சாமி, கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், கொமராபாளையம் ஊராட்சி மன்ற துணை தலைவர் ரமேஷ், வளர்ச்சிக்குழு உறுப்பினர் ராசு,வார்டு உறுப்பினர்கள்; வடிவேலு, கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், சாவித்திரி, குருநாதாள், ரத்னா, விக்னேஷ்வரி, கதிரி,ஊராட்சி செயலாளர் குமார்,மற்றும் கிளை கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
- ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment