முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா சத்தியமங்கலத்தில் கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 June 2022

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா சத்தியமங்கலத்தில் கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் முன் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திருவுருவப் படத்திற்கு  ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் தலைமை தாங்கி மாலை அணிவித்து மலர்தூவி இனிப்புகள் வழங்கி மரியாதை செய்தார். 


சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும்,  சத்தியமங்கலம் நகர திமுக பொறுப்பாளர் ஆர் . ஜானகி ராமசாமி இவ்விழாவிற்கு முன்னிலை வகித்தார். மேலும் விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ரங்கசாமி, நகராட்சி துணைத் தலைவர் ஆர். நடராஜ், நகர பொறுப்புக் குழு உறுப்பினர் எஸ். கே. ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாசிர், சத்தியமங்கலம் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் 3-ஆவது வார்டு உறுப்பினர் சாவித்திரி, 4வது வார்டு உறுப்பினர் நாகராஜ், ஆறாவதுவார்டு உறுப்பினர் நந்தினி, 7-வது வார்டு உறுப்பினர் தேவி, ஒன்பதாவது வார்டு உறுப்பினர் புஷ்ப வள்ளி, 10வது வார்டு உறுப்பினர் வேலுச்சாமி, 11-ஆவது வார்டு உறுப்பினர் சரவணன், 12வது வார்டு உறுப்பினர் குர்ஷித், 15 வது உறுப்பினர்  ஹிதாதுன்னிசா 16-ஆவது வார்டு உறுப்பினர் சவுத்தாம்மா,  17வது வார்டு உறுப்பினர் சரஸ்வதி, 19வது வார்டு உறுப்பினர் லட்சுமி, 21வது வார்டு உறுப்பினர் பேபி, 24வது வார்டு உறுப்பினர் நாகராஜ், 25வது வார்டு உறுப்பினர் செல்வி,  சத்தி நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் ஸ்ரீராம் வேலுச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


- தமிழர் குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி ‌. 

No comments:

Post a Comment