அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் ரூ 61 லட்சத்தில் தார்சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 June 2022

அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் ரூ 61 லட்சத்தில் தார்சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு திருவள்ளுவர் வீதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 61 லட்சம் செலவில் புதிதாக தார்சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் திருமதி. மகேஸ்வரி செந்தில்நாதன் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார். 


அரியப்பம்பாளையம் பேரூராட்சி திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஏ. எஸ். செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். மேலும் இவ்விழாவில் அரியப்பம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ், உதவி செயற்பொறியாளர் கணேசன், அரியப்பம்பாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி, அரியப்பம்பாளையம் பேரூராட்சி 10 வது வார்டு உறுப்பினர் திருமதி. கலைவாணி முருகன், மற்றும் திமுக நிர்வாகிகள் துரைசாமி, முருகன், மதியழகன், ஜோதி நாதன் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.


- ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவமூர்த்தி.

No comments:

Post a Comment