குடிநீர் பிரச்னை நடவடிக்கை எடுக்க யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரி அவர்களை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 June 2022

குடிநீர் பிரச்னை நடவடிக்கை எடுக்க யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரி அவர்களை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒன்றியம் புதுபீர் கடவு ஊராட்சி பசுவா பாளையம் அருந்ததியர் பகுதியில் 9வது வார்டில் 120 குடும்பங்களும் 500க்கும் மேற்பட்டவர்கள் அங்கே வசித்து வருகிறார்கள் இவர்களின் அன்றாடும் தேவைக்கான குடிதண்ணீர் கடந்த ஒரு வருடமாக சரியாக குடிதண்ணீர் வராமல் வந்த மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள் இது சம்பந்தமாக  மக்களுடன் சத்தியமங்கலம் யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரி அவர்களை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.


அதன் பிறகு அந்த ஊருக்கு நேற்று நேரில் சென்று பார்த்த போது அந்த ஊரில் இதுவரையில் சாக்கடை வசதி இல்லாமல் அவரவர் வீட்டு முன்னாடியே தண்ணீர் தேங்கி அவர்கள் பல இன்னல்களை சந்தித்துள்ளார்கள் மேலும் அந்த ஊரிலுள்ள வீதிகளை சுத்தம் செய்யாமல் புல் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடைக்கின்றது. எனவே இந்த மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி புதுபீர் கடவு ஊராட்சி மன்ற தலைவர் க.முருகன் அவர்களை நேரில் சந்தித்து பொதுமக்களுடன் இந்த 3 கோரிக்கைகள் அவரிடம் சொல்லி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 


பேச்சுவார்த்தையின் இறுதி முடிவில் இரண்டு நாட்களுக்குள் உங்களுடைய தண்ணீர் பிரச்சனையை நான் சரி செய்து விடுகிறேன் என்றும் சாக்கடை வசதி இல்லாத தெருக்களில் உடனடியாக நான் சாக்கடை கால்வாய் அமைத்து பணிகளை செய்கிறேன் என்றும் ஃபுல் செடிகளை  அகற்றி உடனடியாக ஊராட்சி நிர்வாகம் மூலமாக நான் அனைத்து பணிகளையும் செய்து கொடுக்கிறேன் உறுதி அளித்தார் அந்த அடிப்படையில் அதனை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டதால் மேற்படி போராட்டங்கள் எதுவும் செய்யாமல் மக்கள் அனைவரும்  அங்கிருந்து கலைந்து சென்றார்கள். 


உடன் ஆதித்தமிழர் பேரவை மேற்கு மாவட்ட செயலாளர் பெ. பொன்னுசாமி, பவானிசாகர் தொகுதி செயலாளர் த. ராஜசேகர், நிதி செயலாளர் மாவட்ட தொழிலாளர் பேரவை ர. ரவி, நிதி செயலாளர் மாவட்ட மகளிரணி பசுவாபாளையம் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் ரா. புவனேஸ்வரி, கிளை பொறுப்பாளர் பசுவா பாளையம் க. தருமன், கிளை பொறுப்பாளர் பசுவா பாளையம் க. ரவி, கிளை பொறுப்பாளர் பசுவாபாளையம் பழனிசாமி, மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்  ஊர் பொதுமக்கள் என 60-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டார்கள். 


- தமிழகக் குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment