ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மையத்தின் சார்பில் விக்ரம் 2 பட வெற்றியின் கொண்டாட்டமாக பனையம்பள்ளி யிலுள்ள பிரபஞ்ச அமைதி சேவா ஆசிரமம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஈரோடு வடகிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர் திரு . ஜி. சி. சிவகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் திரு. மா.பழனிவேல் முன்னிலை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் திரு மோகன் குமார் வரவேற்புரையாற்றினார். மேலும் இவ்விழாவில் மாணவரணி அமைப்பாளர் திரு விக்னேஷ், மாவட்ட பொருளாளர் திரு.பழனிசாமி, லோகு டிரைவிங் ஸ்கூல் லோகநாதன், கிளைச் செயலாளர் திரு. மதிவாணன், கிளைச் செயலாளர் திருமணிபாலா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
-ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.


No comments:
Post a Comment