ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 3வது வார்டு தில்லை நகரில் ரூ 69 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என். நல்லசிவம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சித் தலைவர் தி. ஜனார்த்தனன் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி துணைத் தலைவரும், புளியம்பட்டி திமுக நகர செயலாளர் பி. ஏ. சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இவ்விழாவில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அ. பண்ணாரி, புளியம்பட்டி நகராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி ஆணையாளர், நகராட்சி பொறியாளர், நகராட்சி ஊழியர்கள், புளியம்பட்டி நகர திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment