ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொடிவேரியில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோபி மாவட்ட மாணவரணி தலைவர் மா. சூர்யா தலைமை தாங்கினார்.
ஈரோடு மண்டல மாணவரணி செயலாளர் த. சிவபாரதி வரவேற்புரையாற்றினார், ஈரோடு மண்டல இளைஞர் அணி செயலாளர் ப. வெற்றிவேல் அறிமுக உரையாற்றினார், மாவட்ட தலைவர் ந. சிவலிங்கம் தொடக்க வகுப்பு எடுத்தார். திராவிட கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த. சண்முகம் மாணவர்களிடத்தில் சிறப்பாக தந்தை பெரியார் பற்றியும் திராவிடர் இயக்க வரலாறு பற்றியும் வகுப்பு எடுத்தார்.
மாவட்டமாணவரணி அமைப்பாளர் அஜித்குமார், சாந்த் மற்றும் 20 புதிய மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment