ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், சத்தியமங்கலம் நகர திமுக பொறுப்பாளர் திருமதி. ஆர். ஜானகி ராமசாமி அவர்கள் தலைமை தாங்கினார் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் திரு. எம். சரவண குமார் அவர்களும், சத்தியமங்கலம் நகராட்சி துணைத் தலைவர் திரு. ஆர். நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மேலும் இக்கூட்டத்தில் சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்கத்தின் தலைவர் எஸ் . என். ஜவகர் அவர்களும், அனைத்து வணிகர் சங்கத்தின் செயலாளர் ச.மா. சிவக்குமார் மற்றும் சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment