ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட புங்கம்பாடி ஊராட்சி 7வது வார்டு உறுப்பினரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சென்னிமலை ஒன்றிய துணைச் செயலாளருமான திரு. துரைசாமி அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தம், கோட்பாடுகள், கட்சி ஆட்சி வளர்ச்சி பணி மற்றும் தலைமை பண்பாடு ஆகியவை மூலம் கவர்ந்து இழுக்கப்பட்டு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
நடைபெற்ற இணைப்பு நிகழ்வில் தெற்கு மாவட்ட தலைவர் எஸ். டி. செந்தில்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, பட்டியல் அணி மாநில செயலாளர் பி. அய்யாசாமி, மாவட்ட தலைவர் சக்திவேல் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.

No comments:
Post a Comment