முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா.

ஈரோடு மாவட்டம்,  ஈரோட்டில் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவீரன் பொல்லான் பேரவை மற்றும் அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 


முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாள் புகழ் வணக்கம். அடித்தட்டு மக்களின் உரிமைக்காகவும் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா கொள்கைகளை ஏற்று ஏழை எளிய மக்களின் ஒளிவிளக்காக திகழ்ந்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள் அருந்ததியர் சமூகத்திற்கு கல்வி வேலைவாய்ப்பில் 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியவர். மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றும் திருவிளக்கு திருநங்கைகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை வகித்தவர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாளில் புகழ் வணக்கம் செய்யப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் த.சண்முகம், ஜெய்சக்தி அறக்கட்டளை காந்திசண்முகம், தலித் விடுதலை இயக்க மாவட்ட தலைவர் பொன். சுந்தரம், அருந்ததியர் மக்கள் விடுதலை இயக்கத்தலைவர் ஆர் கே, சாமிநாதன், தலித் விடுதலை கட்சி மாநில அமைப்பாளர் வெ. ஆறுமுகம் ஜெகஜீவன்ராம் ஜனநாயக மக்கள் இயக்க பொதுச்செயலாளர் எம்.கே.ஆறுமுகம் மாவட்ட தலைவர் அண்ணாதுரை, ஆகியோர் கலந்து  கொண்டார்கள்.


- ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment