ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மாக்கினாங்கோம்பை ஊராட்சி, தட்டாம்புதூரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடியேற்று விழா மற்றும் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
தட்டாம் புதூர் தேமுதிக கிளை செயலாளர் காளியப்பன் மற்றும் உறுப்பினர்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் சத்தி திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளருமான திரு. கே.சி.பி.இளங்கோ அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்கள். புதிதாக திமுகவில் இணைந்த அவர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.
மேலும் இவ்விழாவில் மாக்கினாம்கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஈஸ்வரன்,இண்டியன் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.செந்தில், அரசூர் ஊராட்சி துணைத் தலைவர் திரு. சரவணகுமார் மற்றும் திமுக முன்னோடிகள் தட்டாம்புதூர் சசிகுமார், தாசநாயக்கனூர் சசிகுமார், விசுவநாதன், அசோகன், அம்முபூபதி, அரசூர் சந்தனகுமார் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment