தாளவாடியில் உள்ள கல்குவாரி பகுதியில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 June 2022

தாளவாடியில் உள்ள கல்குவாரி பகுதியில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்.

தாளவாடி ஒட்டியுள்ள ஓசூர் கிராம பகுதியில் அமைந்துள்ள தனியார் கல் குவாரி பகுதியை ஒட்டி பசுமாடு ஒன்று இறந்து கிடந்தது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து பசுமாடு  சிறுத்தையால் தாக்கப்பட்டு இறந்துள்ளதை உறுதி செய்தனர். நேற்று தனிக்குழு அமைத்து இரவு முழுவதும் கண்காணிப்பு மேற்கொண்டனர். 


இன்று தாளவாடி வனசரக அலுவலர் சதீஷ் தாளவாடி வட்டாட்சியர் உமா மகேஸ்வரன் வனவர் பெருமாள் உலக இயற்கை நீரியல் இணை ஒருங்கிணைப்பாளர்  கிருஷ்ணகுமார் தாளவாடி ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் வனப் பணியாளர்கள் கல்குவாரி முழுவதும் ஆய்வு செய்தனர்.


ட்ரோன் கேமராவை பயன்படுத்தி சிறுத்தை பதுங்கி இருப்பதை உறுதி செய்தனர், பல வருடங்களாக கற்கள் மழை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சமீபகாலமாக சிறுத்தை தங்குவதற்கு பயன்படுத்தி வருவதாகவும் மேலும் அவ்விடம் புதர் செடிகள் வளர்ந்து இருப்பதால் சிறுத்தை தங்குவதற்கு ஏதுவாக உள்ளது.


வனத்துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க கல்குவாரி உரிமையாளர் உடமைகளை அகற்று முன் வந்துள்ளதாகவும் வனத்துறை உயர் அதிகாரி உத்தரவின் பேரில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வனத்துறையால் பொருத்தப்பட்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


மேலும் சிறுத்தையை பிடிப்பதற்காக இறையுடன் கூடிய கூண்டு வைக்கப்பட்டுள்ளது. ஆடு மேய்ப்பவர்கள் தனிநபர்களும் கல்குவாரி பகுதியில் வரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்தியை அருகில் உள்ள  கிராமங்களுக்கு தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment