ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மராத்தான் ஓட்டப் பந்தைய போட்டி ஒன்றிய கழக செயலாளர் எம்.சிவபாலன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் தலைமை தாங்கினார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான பதக்கத்தையும், கோப்பையையும் கழக மூத்த முன்னோடிகளுக்கு ஊக்கத்தொகையினை, வீட்டு வசதித்துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துச்சாமி வழங்கினார், இந்நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ. ஜி. வெங்கடாச்சலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. டி கே. சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. கே. ஆர். கந்தசாமி, ஒன்றிய நிர்வாகிகள், பேரூராட்சி தலைவர்,ஒன்றிய குழு உறுப்பினர்கள்,வார்டு கழக செயலாளர்கள், மற்றும் கழக உடன்பிறப்புக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment