ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக அரசு கலை அறிவியல் கல்லூரி இல்லை இந்த குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் அந்தியூர் பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்தனர். நடப்பாண்டு திமுக அரசு அரியணை ஏறிய பின் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜி.வெங்கடாசலம் அவர்களின் தீவிர முயற்சியால் அந்தியூர் பகுதியில் இந்த ஆண்டு முதல் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது.
இக்கல்லூரியின் 2022-2023 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும், வகுப்புகள் ஆகஸ்ட் இரண்டாம் வாரம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது, தற்காலிகமாக இக்கல்லூரியின் மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இக்கல்லூரியில் B.A Tamil -60 B.A English -60 B.Sc Maths-60 B.Sc Computer science -60B.Com-60 ஆகிய பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment