சர்வதேச யோகா தினம்: அரசு பள்ளியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 June 2022

சர்வதேச யோகா தினம்: அரசு பள்ளியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி.

ஈரோடு மாவட்டம் , மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், குலவிளக்கு கிராமம், மின்னப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுடன் யோகா நிகழ்ச்சி நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி. செந்தில்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே. எஸ். சௌந்தரம், பொதுச் செயலாளர் வி.சி.வேதானந்தம், ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட செயலாளர் எம். பரமசிவம், மண்டல தலைவர் டெக்கான் பிரகாஷ், அக்னி ராஜேஷ், மண்டல பொறுப்பாளர்கள் ஜெகதீஷ் குமார், தண்டபாணி, சந்தானம், துளசிமணி, சவிதா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை தங்காயம்மாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் மாவட்ட யோகா நிகழ்வின் பொறுப்பாளர்களான விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஐயப்பன், ஊடகப்பிரிவு அண்ணாதுரை, பெரியசேமூர் கிழக்கு மண்டல் தலைவர் மெய்யானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.


மேலும் பள்ளிக்கு 10  மின்விசிறிகள் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்களாள் வழங்கப்பட்டது, பள்ளி மாணவர்களுடன்  சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் யோகா மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டார்கள்.

No comments:

Post a Comment