ஈரோட்டில் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 June 2022

ஈரோட்டில் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


ஈரோடு மாவட்டம், ஈரோட்டில் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் ஈரோடு பெரியார் மன்றத்தில் மாநில துணைத் தலைவர் T.சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


மாநில பொருளாளர் VA.கேசவன் அவர்கள்  வரவேற்புரையாற்றினார், மாநில அமைப்பாளர் கா.பிரபாகரன், மாநகர மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, கொடுமுடி ஒன்றிய தலைவர் தங்கமுத்து, பொருளாளர்ர மாணிக்கம், ஈரோடு புறநகர் மாவட்ட பொறுப்பாளர் ராஜ்குமார், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் சங்கர், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் நேதாஜி ஆகியோர் இக் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.


சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், குறிஞ்சி யார் மக்கள் கூட்டமைப்பு முப்பெரும் விழா சம்பந்தமாக செயற்குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது, இந்த கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் K.சந்தோஷ்குமார் அவர்கள் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment