பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தரைமட்ட தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 June 2022

பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தரைமட்ட தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம், கூடக்கரை ஊராட்சி, தொட்டி பாளையத்தில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்  கே. சுப்பராயன் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 6.40 இலட்சம் மதிப்பில் தரைமட்ட தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 


இவ்விழா நம்பியூர் ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளரும்,  நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் ப செந்தில்குமார், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் . எஸ். வி. சரவணன்  ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.


மேலும் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் ஒன்றிய கழக பொருளாளர் என். சி. சண்முகம், ஒன்றியக் கழக துணைச் செயலாளர் மைக்.பழனிச்சாமி,  நம்பியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் கே.பி. சண்முகசுந்தரம,  மாவட்ட பிரதிநிதி மனோகரன், கூடக்கரை கிளைக் கழகச் செயலாளர் சுப்பிரமணியம்,  கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment