இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் மாநில தலைவர் திரு.ஹரிஹரன் தலைமை தாங்கினார், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.பாஷா, தெற்கு மாவட்ட செயலாளர் வி. ஏ. பூபாலன், தெற்கு மாவட்ட பொருளாளர் எம். பி. பரமசிவம், தெற்கு மாவட்ட துணை செயலாளர் டி. மகுடபதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் எஸ். அப்பாஸ் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. கணபதி அவர்கள் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
குறிஞ்சியார் மக்கள் கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் , தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஈரோடு சாகுல், ஈரோடு ஷேக் அலாவுதீன், ஈரோடு பேபி, சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி, அந்தியூர் நரசிம்மமூர்த்தி, பெருந்துறை பொன்னுச்சாமி, அந்தியூர் சபரிராஜன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் ஈரோடு தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சாமுவேல் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment